Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தமிழ்நாட்டில் பெண் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பில்லை…" – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 13, 2024
in அரசியல் செய்திகள்
0
“தமிழ்நாட்டில் பெண் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பில்லை…" – எடப்பாடி பழனிசாமி காட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளிடம் விசாரித்த பெண் செய்தியாளர் மிரப்பட்டதாக தனது X தளத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
Kolkata அரசியல் ஆட்டம்: `பதவி விலகத் தயார்’ -மம்தா… `முதல்வரை சமூக நீக்கம் செய்கிறேன்’ -ஆளுநர்..!

அந்தப் பதிவில், “ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளின் அவல நிலை குறித்து செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்த விளக்கம் தருவதாக பெண் செய்தியாளர் லதா என்பரை தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் அலுவலகத்தில் வைத்து மிரட்டி அனுப்பி இருப்பது சமூகநீதி, பெண் விடுதலை குறித்து பக்கம்பக்கமாக பேசும் விடியா தி.மு.க அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.

ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளர் லட்சுமி பிரியா இ.ஆ.ப. அவர்கள் பேட்டி கொடுக்க தலைமைச் செயலகத்திற்கு அழைத்த நிலையில், பேட்டியின் இடையில் பெண் செய்தியாளர் லதா, அரசு அதிகாரி வெற்றிச்செல்வன் என்பவரால் மிரட்டப்பட்டு, செயலாளர் அறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆதி திராவிடர் மாணவர் விடுதியின் உண்மை நிலையை மக்களுக்கு வெளியே கொண்டுவந்த ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்தை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பெயரால் தி.மு.க அரசு மிரட்டுவது பாசிசத்தின் உச்சம்.

தமிழ்நாட்டில் பெண் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை- முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்!

ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளின் அவல நிலை குறித்து செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்த விளக்கம் தருவதாக பெண் செய்தியாளர் லதா என்பரை தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர்… pic.twitter.com/DN5iWsFvGC

— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 12, 2024

தி.மு.க ஆட்சியில், மாண்பு பொருந்திய தலைமைச் செயலகத்தில், ஒரு பெண் செய்தியாளர் நடத்தப்படும் முறை இது தானா? பெண் செய்தியாளரை மிரட்டிய அரசு அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், அதிகார மமதையோடு ஊடகங்களை ஒடுக்க நினைக்கும் முயற்சிகளை கைவிடுமாறு தி.மு.க முதல்வரை வலியுறுத்துகிறேன்.

மேலும் ஆதிதிராவிட மாணவர்களின் நலனுக்காக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் லதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு தொடர்வேன் என தலைமைச் செயலகத்தில் வைத்தே அதிகாரி மிரட்டி இருப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்லியே தீர வேண்டும்.

“ஊடகச் சுதந்திரம்”, “கருத்துச் சுதந்திரம்” என்றெல்லாம் வாயளவில் மட்டுமே பேசும் தி.மு.க முதல்வர், ஊடகங்களின் செயல்பாட்டை முடக்க முயல்வதற்கும், மிரட்டுவதற்கும் எனது கடும் கண்டனங்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சிக்கிய பட்டாம்பூச்சி திருடர்கள் – கைதும் 2,00,000 டாலர் அபராதமும் | நடந்தது என்ன?





.

Previous Post

100 கோடி ஃபாலோயர்களை பெற்ற ரொனால்டோ! வரலாற்று சாதனை!

Next Post

வங்கிக் கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிட்டது..! துயரத்தைப் பகிர்ந்த 96 பட இயக்குநர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வங்கிக் கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிட்டது..! துயரத்தைப் பகிர்ந்த 96 பட இயக்குநர்!

வங்கிக் கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிட்டது..! துயரத்தைப் பகிர்ந்த 96 பட இயக்குநர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In