உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டங்களின் இறுதி நாளில் வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த 10 நாட்களும் மக்கள் தங்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று(11.09.2024) , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் இல்லத்தில் நடைபெற்ற பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்லியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடு இல்லத்தில் விநாயகர் பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் கலந்துகொண்டேன். நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் கடவுள் விநாயகர் வழங்கட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Joined Ganesh Puja at the residence of CJI, Justice DY Chandrachud Ji.
May Bhagwan Shri Ganesh bless us all with happiness, prosperity and wonderful health. pic.twitter.com/dfWlR7elky
— Narendra Modi (@narendramodi) September 11, 2024
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
.
