Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அடிக்கடி பழுதான ஓலா எலெக்ட்ரிக் பைக்… ஷோரூமை தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2024
in அரசியல் செய்திகள்
0
அடிக்கடி பழுதான ஓலா எலெக்ட்ரிக் பைக்… ஷோரூமை தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடகா மாநிலத்தில் மெக்கானிக் வேலை பார்த்துவருபவர் நதீம். இவர் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம், கல்புர்கியில் உள்ள ஓலா ஷோரூமிற்கு சென்று, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, வண்டியை ஒரு முறை சார்ஜ் செய்தால், 180 கி.மீ. தூரம் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அந்த வண்டியை வாங்கியுள்ளார்.

பிறகு அந்த வண்டியை தனது அன்றாட வாழ்வில் உபயோகம் செய்துள்ளார். ஆனால், வண்டி வாங்கிய மூன்றாவது நாளில் இருந்தே வண்டியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பேட்டரி மற்றும் சவுண்ட் சிஸ்டமில் ஏராளமான தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவர் வண்டியை மீண்டும் ஷோரூமிற்கு கொண்டு சென்றுள்ளார்.

விளம்பரம்

ஒரு பிரச்சனை என்று எடுத்து சென்று சரி செய்து கொண்டுவந்தால் மீண்டும் வேறொரு பிரச்சனை வந்துள்ளது. இப்படி தொடர்ந்து பிரச்சனை வந்ததால் அவர் தொடர்ந்து வண்டியை ஷோரூமிற்கு கொண்டு சென்றுள்ளார். மேலும், ஷோரூம் ஊழியர்களோ, சரியாக ரெஸ்பான்ஸ் கொடுக்காததால் எரிச்சல் அடைந்துள்ளார். இதனால், அவர்களுடன் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டு தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் :
பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் ரகளை – சிறுவன் உட்பட 2 பேரை தாக்கி அட்டூழியம்!

விளம்பரம்

புது வண்டி தொடர்ந்து பிரச்சனை செய்தது, ஷோரூமிலும் முறையான பதில் இல்லை என பல்வேறு பிரச்சனைகளால் நதீம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில், இன்று காலை மீண்டும் ஓலா ஷோரூமிற்கு சென்ற அவர் திடீரென தன் கையில் வைத்திருந்த பெட்ரோலை ஷோரூமில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

#JUSTIN கர்நாடகா: கல்புர்கி பகுதியில் உள்ள ஓலா மின்சார பைக் ஷோரூமிற்கு தீவைத்த வாடிக்கையாளர்#Karnataka #Bike #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/ohcjLnpUjF

— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 11, 2024

விளம்பரம்

சில நிமிடங்களில் பற்றி எரிந்த தீ மளமளவென பரவ, அந்த இடம் முழுக்க கரும்புகை சூழ்ந்தது. இதனைக் கண்டு பதறிய அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஷோரூமில் விற்பனைக்கு இருந்த 6 வாகனங்கள், கணினிகள் என அனைத்தும் முழுவதுமாக எரிந்து தீக்கிரையானது. சுமார் 8.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நதீம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்போது அவரை கைது செய்து வருகின்றனர்.

விளம்பரம்

.





.

Previous Post

புணேவில் 16.4 ஏக்கர் நிலத்தை ரூ.520 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாஃப்ட்!

Next Post

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In