ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த இமானுவேல் சேகரனாரின் வாழ்வைப் போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தீண்டாமையை ஒழிக்கவும் – சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது நினைவு நாள் இன்று.
நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம்!
சமத்துவமும் – சமூகநல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
