சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் மின்தடை?: மீஞ்சூர் டவுன், டி.எச்.ரோடு, தேரடி தெரு. சிறுவாக்கம். சூரியா நகர், பி.டி.ஓ. அலுவலகம், வன்னிப்பாக்கம். சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம் அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, ஜி.ஆர்.பாளையம். எஸ்.ஆர் பாளையம். கொண்டக்கரை, பள்ளிபுரம். வழுதிகைமேடு, கரையான்மேடு ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
