இந்த சம்பவம் ஃபுலேரா-அகமதாபாத் வழித்தடத்தில் சாரத்னா மற்றும் பங்காத் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.
முதலில் ரயில்வே தண்டாளத்தில் சிமெண்ட் பாறைகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, சிமெண்ட் பாறைகள் உடைக்கப்பட்டு இருந்தது.
இந்த ரயில் கவிழ்ப்பு சதி தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டு, காளிந்தி விரைவு ரயிலைக் கவிழ்ப்பதற்கான சதி முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
