Tamil Live Breaking News: டாடா நிறுவனத்தின் TP சோலார் நிறுவனத்தில் உற்பத்தி தொடக்கம்!
திருநெல்வேலியில் அமைத்துள்ள டாடா பவர் நிறுவனத்தின் தொழிற்சாலையில் சோலார் செல் உற்பத்தியை தொடங்கி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022 முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகி ரூ.4,300 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆலை இது. இந்த ஆலையில் 80 சதவீத ஊழியர்கள் பெண்கள்தான்.
Tamil Live Breaking News: தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் – பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!
தொடக்க கல்வி ஆசிரியர்களை போராட்டத்தில் ஈடுபட வற்புறுத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆசிரியர்களை போராட்டத்தில் ஈடுபட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அமைப்பான டிட்டோஜாக் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தும் நிலையில் பள்ளிக்கல்வித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamil Live Breaking News: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!
தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்கின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அமைப்பான டிட்டோஜாக் இன்று போராட்டம் நடத்துகிறது. முன்னதாக கல்வித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் நடத்தப்படுகிறது.
Tamil Live Breaking News: தமிழ்நாட்டில் ஜேபில் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு!
ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைகிறது. திருச்சியில் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- First Published :
