Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாக்யராஜ் மனைவி மட்டும் அப்போ அதை பண்ணலன்னா நான் இல்ல!.. மனம் திறந்த எதிர்நீச்சல் ரேணுகா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 22, 2023
in அரசியல் செய்திகள்
0
பாக்யராஜ் மனைவி மட்டும் அப்போ அதை பண்ணலன்னா நான் இல்ல!.. மனம் திறந்த எதிர்நீச்சல் ரேணுகா
33
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Television oi-V Vasanthi
Published: Thursday, June 22, 2023, 6:05 [IST]
சென்னை: நடிகர் பாக்யராஜ் மனைவி மற்றும் பாக்யராஜ் பற்றி எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் நடிகை பிரியதர்ஷினி பல ரகசியங்களை கூறியிருக்கிறார். நடிகர் பாக்யராஜ் உடன் தாவணி கனவுகள் திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் அந்த திரைப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றியும் அதில் பேசியிருக்கிறார். தமிழில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த “சுவரில்லா சித்திரங்கள்” என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகர் பாக்கியராஜ் ஒரு இயக்குனராக அறிமுகம் ஆக்கியிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு இயக்குனராக பலருடைய மனதிலும் கவர்ந்து விட்டார். அதற்கு காரணம் அவருடைய படங்களில் பெரும்பாலானவை குடும்ப திரைப்படங்களாகவே இருந்ததுதான். பாக்யராஜின் திரைப்படங்களில் பெரும்பாலும் யதார்த்தம் நிறைந்ததாகவும், அதிக சினிமாதளம் இல்லாததாகவும் இருப்பதாகவே அதிகமான ரசிகர்கள் அதை விரும்பி பார்த்து வந்தனர். அதிலும் ஆரம்ப காலத்தில் அவர் இயக்கிய அந்த ஏழு நாட்கள், தூரல் நின்னு போச்சு போன்ற திரைப்படங்கள் பெரும் வரவேற்பு கொடுத்தது. இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருப்பது போன்று தான் அப்போது பாக்யராஜ்க்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் தான் இயக்கும் திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து பாக்கியராஜ் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து விட்டார். அந்த வகையில் அவர் நடித்த முந்தானை முடிச்சு மற்றும் தாவணி கனவுகள் திரைப்படம் இரண்டுமே அதிகமான வரவேற்பை பெற்று நடுத்தர குடும்பத்து மக்களையும் அதிகமாக கவர்ந்திருந்தது. காரணம் அந்த இரண்டு திரைப்படங்களில் பாக்கியராஜ் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவராக நடித்திருப்பார். இந்த நிலையில் தாவணி கனவுகள் திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜின் கடைசி தங்கச்சியாக நடிகை பிரியதர்ஷினி நடித்திருப்பார். அவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய எதார்த்தமான நடிப்பை பார்த்து பிடித்துப்போன ரசிகர்கள் இவரை அடிக்கடி பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் கரிகாலனோடு இவர் பேசும்போது அடிக்கும் நக்கல் குணசேகரனிடம் பேசும்போது டைமிங் கவுண்டர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஆனால் இவர் பல வருடங்களுக்கு முன்பு குழந்தையாகவே இதே போலவே நக்கல் அடித்திருக்கிறார். அதுவும் “தாவணி கனவுகள்” திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் மட்டுமல்லாமல் நடிகர் சிவாஜியையும் அடிக்கடி கலாய்க்கும் குட்டி குழந்தையாக நடித்திருப்பார். இந்த நிலையில் தான் அந்த திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் பாக்யராஜோடு அவருடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார். அப்போது பாக்கியராஜ் இடம் அவருடைய மனைவி பூர்ணிமா பற்றி பேசி இருக்கிறார். அப்போது எனக்கு இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பை வாங்கி தந்தது பூர்ணிமா தான் என்பதை கூறியிருக்கிறார். அதோடு அப்போது பிரியதர்ஷினி ஏதோ ஒரு சின்ன திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் அவருடைய நடிப்பை பார்த்து பிடித்துப்போன பூர்ணிமா இந்த பெண் தாவணி கனவுகள் திரைப்படத்திற்கு சரியாக இருப்பார் என்று இவரை பரிந்துரை செய்தாராம். அதனை நினைவுக்கூர்ந்த பிரியதர்ஷினி, பூர்ணிமா பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். அன்னைக்கு மட்டும் பூர்ணிமா எனக்கு அப்படி ஒரு உதவி செய்யலைன்னா என் வாழ்க்கை எப்படியோ போய் இருக்கும் என்றும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Actor Bhagyaraj’s wife and actress Priyadarshini, who plays Renuka in the serial Ethirneechal, has revealed many secrets about Bhagyaraj.In it, he talks about his experiences while acting in the movie Davani Kanampur with actor Bhagyaraj and how he got the opportunity to do the film.
Story first published: Thursday, June 22, 2023, 6:05 [IST]

.

Previous Post

6 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று லண்டன் பயணம்

Next Post

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1,760 கிலோ கஞ்சா கடத்த முயற்சி – மாவோயிஸ்ட் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1,760 கிலோ கஞ்சா கடத்த முயற்சி - மாவோயிஸ்ட் கைது

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1,760 கிலோ கஞ்சா கடத்த முயற்சி - மாவோயிஸ்ட் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In