Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`மகா.,’ அரசியல்: கூட்டணியில் குழப்பமோ குழப்பம்; ஷிண்டே, அஜித் பவாருடன் பஞ்சாயத்து பேசும் அமித் ஷா? | Confusion in Alliance: Union Minister Amit Shah Camps in Mumbai, Talks with Shinde, Ajit Pawar

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 9, 2024
in அரசியல் செய்திகள்
0
`மகா.,’ அரசியல்: கூட்டணியில் குழப்பமோ குழப்பம்; ஷிண்டே, அஜித் பவாருடன் பஞ்சாயத்து பேசும் அமித் ஷா? | Confusion in Alliance: Union Minister Amit Shah Camps in Mumbai, Talks with Shinde, Ajit Pawar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேலும் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பதிலும் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தன்னை மீண்டும் முதல்வருக்கான வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். ஆனால் பா.ஜ.க அதற்கு தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இதனால் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியில் இருக்கிறார். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பா.ஜ.க தலைவர்கள் பலர் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து இருக்கின்றனர். எனவே அவர்களது வீட்டிற்கு செல்வதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று மும்பை வந்திருந்தார். அவர் மும்பையில் இன்று லால்பாக் ராஜா கணபதியை தரிசனம் செய்தார். அவருடன் துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பா.ஜ.க தலைவர்கள் வந்திருந்தனர்.

ஆனால் மற்றொரு துணை முதல்வர் அஜித்பவார் அவர்களுடன் வரவில்லை. முதல்வர் ஷிண்டேயுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதை அஜித்பவார் தவிர்த்து வருகிறார். அதோடு டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்திற்கு கூட அஜித்பவார் செல்வதை தவிர்த்துவிட்டார். நேற்று அஜித்பவார், பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் அப்பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அஜித் பவார் மும்பையில் தான் இருக்கிறார். அதோடு அடிக்கடி, `சரத்பவாரிடமிருந்து பிரிந்து வந்து தவறு செய்துவிட்டேன் ’என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

இன்று அமித் ஷா டெல்லிக்கு செல்வதற்கு முன்பு மூன்று தலைவர்களையும் ஒன்றாக அமரவைத்து அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை கலைந்துவிட்டு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அமித் ஷா அனைத்து விநாயர் சிலைகளையும் தரிசனம் செய்துவிட்டு விமான நிலையம் செல்லும்போது அங்கு வைத்து மூன்று தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். இதில் கருத்து வேறுபாடுகள் மட்டுமல்லாது தொகுதி பங்கீடு குறித்தும் பேசுகின்றனர். பா.ஜ.க 130 தொகுதியிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 65 தொகுதியிலும், சிவசேனா 85 தொகுதியிலும் போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

தில்லியில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை!

Next Post

நாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

நாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In