“குருஜி விமானத்தில் வந்துகொண்டிருக்கிறார். சென்னை வந்தவுடன் எல்லா சர்ச்சைகளுக்கும் விளக்கமளிப்பார்.’ என்பது போல ஒரு பதிவை மஹாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு காலையிலேயே அலப்பறையைக் கூட்டியிருந்தனர்.
மதியம் 1:10 மணியளவில் மஹாவிஷ்ணு வந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது. கொஞ்சம் அதிகமாகவே போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.விமான நிலையத்திற்குள்ளேயே மஹாவிஷ்ணுவை வளைத்த சைதாப்பேட்டை போலீஸார், அங்கேயே அலுவலகத்தில் வைத்து சிறிது நேரம் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
