Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இது இந்தியாவின் பெருமை.. ஐநாவில் 180 நாட்டு பிரதிநிதிகளுடன் யோகா! பிரதமர் மோடி தலைமையில் கோலாகலம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 21, 2023
in அரசியல் செய்திகள்
0
இது இந்தியாவின் பெருமை.. ஐநாவில் 180 நாட்டு பிரதிநிதிகளுடன் யோகா! பிரதமர் மோடி தலைமையில் கோலாகலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Jeyalakshmi C
Updated: Wednesday, June 21, 2023, 18:53 [IST]
சென்னை: சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநாவின் தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று யோகா செய்து அசத்தினர். 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற போது, ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிநாட்டு வெற்றிகள் மற்றும் இந்தியாவின் உலகளாவிய சுயவிவரத்தை உயர்த்துவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக இது கருதப்படுகிறது. மோடி தலைமையிலான பாஜக பொறுப்பேற்று 9 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் சாதனைகளைப் பற்றி நாடு முழுவதும் பரவி வருவதால், தற்போது உலக யோகா தினமும் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க் நகரில் ஐநாவின் தலைமையகத்தில் இன்று நடைபெறும் யோகா தின விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ஐநா தலைமையகத்தில் 9வது ஆண்டு சர்வதேச யோகா தினம் காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்த உடன் பிரதமர் மோடி ஐநா பொதுச் சபையில் தனது முதல் உரையில், பண்டைய இந்திய பாரம்பரியத்தை மனிதகுலத்திற்கு ஒரு விலைமதிப்பற்ற பரிசு என்று விவரித்து, சர்வதேச யோகா தினத்தை ஏற்றுக்கொள்வதற்கு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய மோடி ”யோகா மனதையும் உடலையும் ஒருமைப்படுத்துகிறது; சிந்தனை மற்றும் செயல்; மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம்; ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை. இது உடற்பயிற்சிக்கானது அல்ல, ஆனால் உங்களுடனும், உலகத்துடனும், இயற்கையுடனும் ஒற்றுமை உணர்வைக் கண்டறிவதே ஆகும், என்று கூறினார். 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானம் ஐநாவில் உள்ள 175 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.இதனையடுத்து சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் இந்த நாளைக் குறிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஐ.நா தலைமையகத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். 180 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி யோகா செய்து அசத்தினார். பிரதமர் மோடி வெள்ளை நிற டீசர்ட்(காலரில் நீலநிறம்), வெள்ளை நிற துண்டில் சிவப்பு நிற பார்டர் இருக்கும் துண்டு அணிந்து யோகா செய்தார். அதேபோல் உலக நாடுகளின் பிரதிநிதிகளும் பிரதமர் மோடி அணிந்திருந்த டீசர்ட்டை அணிந்து யோகா செய்து அசத்தினர். இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அணிவதற்காக 4150 டி சர்ட்டுகளை திருப்பூரை சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம் தயார் செய்து அனுப்பி இருந்தது. இந்த நிறுவனம் தான் 2016ஆம் ஆண்டு முதலே சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு டி சர்ட்களை அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
International Yoga Day is celebrated today. Yoga Day is being celebrated at the UN headquarters in New York under the leadership of Prime Minister Modi. Important representatives from 180 countries participated in this ceremony.

.

Previous Post

கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கிய 19 பேரின் ஜாமீன், முன்ஜாமீனுக்கு எதிராக வழக்கு

Next Post

பாடகி மீது போனை வீசிய ரசிகர் |ஆப்கானிஸ்தானில் குற்றவாளிக்கு மரண தண்டனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாடகி மீது போனை வீசிய ரசிகர் |ஆப்கானிஸ்தானில் குற்றவாளிக்கு மரண தண்டனை

பாடகி மீது போனை வீசிய ரசிகர் |ஆப்கானிஸ்தானில் குற்றவாளிக்கு மரண தண்டனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In