ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான உரிமை, ஊதியம் என்பதெல்லாம் அம்பேத்கர் நம் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தில் தெளிவாக வகுத்து வைத்திருக்கிறார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவையெல்லாம் நடைமுறையில் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
நமது பள்ளி குழந்தைகளின் பாடப் புத்தகத்திலேயே அப்பா செய்தித்தாள் படிப்பது போன்றதாகவும், அம்மா சமையல் செய்வது போன்றதாகவும்தான் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படித்தான் நம் சமூகத்தில் சிறுவயதிலிருந்து குழந்தையின் உளவியலில் சமத்துவமின்மை புகுத்தப்படுகிறது.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பல பிரச்னைகள் இருக்கின்றன. மனித உரிமை மீறல்கள் அவர்கள் மீது நடக்கின்றன. நீதிபதிகள் வீட்டில்கூட வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. பொருளாதார, சமூக, சட்ட ரீதியாக இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் சமமாக, மதிப்புடன், நல்ல சம்பளத்துடன் இந்தச் சமூத்தில் வாழ வழிவகை செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
