இந்தியக் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் குஜராத்தில் போர்பந்தர் கடற்கரையில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பணியாளர்கள் மூவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாக இந்தியக் கடலோர காவல்படை(ஐசிஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பணியாளர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டு கடலில் விழுந்தது. ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மூன்று பணியாளர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மீட்புப் பணிகளுக்காக ஐசிஜி 04 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களை அனுப்பியுள்ளதாக ஐசிஜி தெரிவித்துள்ளது.
