ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர், எந்த பாடப்புத்தகம் முகலாய மன்னர் அக்பர் சிறந்தவர் எனக் கூறினாலும் அது எரிக்கப்படும் எனப் பேசியுள்ளார். மேலும், அக்பர் பல ஆண்டுகளுக்கு இந்தியாவைக் கொள்ளையடித்தார் என்றும் அவரை ராஜஸ்தானில் எந்த பாடப்புத்தகமும் “சிறந்த ஆளுமை’ எனக் குறிப்பிடக் கூடாது என்றும் பேசியுள்ளார்.
உதய்பூரில் உள்ள சுகதியா பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், “நன்றாகச் சோதித்துவிட்டோம் எந்த புத்தகத்திலும் அக்பர் பற்றிய குறிப்புகள் இல்லை. அப்படி இருந்தால் அந்தப் புத்தகம் எரிக்கப்படும்” என்றார்.

“அக்பர் ஓர் ஆக்கிரமிப்பாளர், அவரைச் சிறந்தவர் எனக் கூறுவது முட்டாள்தனம்” எனவும் அமைச்சர் பேசியுள்ளார்.
