Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொலைகார கும்பலிடம் இருந்து மகனை காத்த தாய்க்கு கத்தி குத்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 31, 2024
in அரசியல் செய்திகள்
0
கொலைகார கும்பலிடம் இருந்து மகனை காத்த தாய்க்கு கத்தி குத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடக மாநிலத்தில் மகனை அடிக்க வந்த கும்பலிடம் தனது மகன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி சமாதானப்படுத்தி அனுப்பிய தாயை, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மகன். மகனை காக்க முயன்ற தாய்க்கு மகனே எமனானது எப்படி?

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், தாசரஹள்ளி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 85 வயதான சாரதம்மா அகடி. கணவனை இழந்த இவர் தனது மகன் சித்தலிங்கப்பாவுடன் வசித்து வந்தார். 43 வயதான சித்தலிங்கப்பாவுக்கு திருமணமாகி கடந்த 10 ஆண்டுகளுக்கு மன்பு மனைவி இறந்து விட்டார்.

விளம்பரம்

இந்நிலையில் சித்தலிங்கப்பாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அப்பகுதி பெண்களுடனும் அவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல் பக்கத்து வீட்டுக்காரரிடம் தகராறில் ஈடுபட அவர்கள் கும்பலாக சேர்ந்து சித்தலிங்கப்பாவை தாக்க முயன்றுள்ளனர்.

இதனைக் கண்டு பதறிப்போன அவரது தாயார் சாரதம்மா ஓடி வந்து, தன் மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது  என்றும், அதனால் தான் காண்போரிடம் எல்லாம் தகராறு செய்கிறான் என்றும் கூறியுள்ளார். உடனே கம்பு, உருட்டுக்கடைகளுடன் அடிக்க வந்தவர்கள் அவற்றை கீழே போட்டு விட்ட அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விளம்பரம்

ஆனால் தன்னை பெற்றெடுத்த தாய் தன்னை பைத்தியம் என்று கூறியது சித்தலிங்கப்பாவால் ஏற்க முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர், எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது  என்று எப்படி கூறுவாய்?” என கேட்டு, தாயிடம் தகராறு செய்துள்ளார். அன்று இரவு இருவரும் வீட்டில் படுத்திருந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த சித்தலிங்கப்பாவிற்கு உறக்கம் வரவில்லை.

தன் தாய் சொன்னது மீண்டும் மீண்டும் மனக்கண் முன் வர படிப்படியாக ஆத்திரம் தலைக்கேறியுள்ளது. அளவு கடந்த கோபம் பொங்கி எழ உண்மையிலேயே பைத்தியம் பிடித்தது போல் எழுந்து சென்று தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தை நெரித்துள்ளார். பின் அருகில் கிடந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.

விளம்பரம்

மறுநாள் காலை தனது சகோதரிகளுக்கு போன் செய்த சித்தலிங்கப்பா, அம்மா இறந்து விட்டார் என்று கூறிவிட்டு செல்போனை துண்டித்தார். அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சாரதாம்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சித்தலிங்கப்பாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: 
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா ஷிவானி நாராயணன்?… வைரல் போட்டோஸ்

பெற்ற தாயே தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த மகன் ஆத்திரம் அடங்காமல் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

.



.

Previous Post

ஆனைமடுவு அணை நீர்மட்டம் 45 அடியாக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Next Post

Multibagger: மல்டிபேக்கர் டிஃபென்ஸ் பங்குகள் கடந்த மாதத்தில் 24% வரை கரெக்ஷன்.. வாங்கலாமா அல்லது விற்கலாமா?-stock market today some shares of multibagger defence stocks price have corrected read details

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Multibagger: மல்டிபேக்கர் டிஃபென்ஸ் பங்குகள் கடந்த மாதத்தில் 24% வரை கரெக்ஷன்.. வாங்கலாமா அல்லது விற்கலாமா?-stock market today some shares of multibagger defence stocks price have corrected read details

Multibagger: மல்டிபேக்கர் டிஃபென்ஸ் பங்குகள் கடந்த மாதத்தில் 24% வரை கரெக்ஷன்.. வாங்கலாமா அல்லது விற்கலாமா?-stock market today some shares of multibagger defence stocks price have corrected read details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In