03

பெரும்பாலும் கோயில்கள் அனைத்தும் கிழக்கு திசை நோக்கியே இருக்கும். ஆனால் சோமேஸ்வரசுவாமி கோவில் மட்டும் வித்தியாசமாக மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இக்கோயிலின் சோமேஸ்வரசுவாமி ஆலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் சிவலிங்கத்தின் மீது மாலை நேரத்தில் சூரிய ஒளியும், இரவில் சந்திரனின் கதிர்களும் விழுவதை ஆச்சரியம், அதிசயம் கலந்த ஒன்றாக இங்குவரும் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
