சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் அதிவிரைவு ரயில்(12667) வாரம்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படுகிறது. மாலை 6.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
