Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கல்வியைக் காவிமயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்..!" – விசிக எம்.பி ரவிக்குமார் கண்டனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 27, 2024
in அரசியல் செய்திகள்
0
“கல்வியைக் காவிமயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்..!" – விசிக எம்.பி ரவிக்குமார் கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதே நேரம் தி.மு.க அரசு நடத்திய முத்தமிழ் முருகன் மாநாடு என்கிற இந்துமதம் சார்ந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து முன்னெடுக்கும் அடையாள அரசியலை திமுக கைப்பற்றுகிறது என்ற கண்ணோட்டமும், காங்கிரஸ் கட்சி பாணியில் மென்மை இந்துத்துவா கோட்பாட்டை நோக்கிய திமுக-வின் பயணம் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.

விசிக எம்.பி ரவிக்குமார்

இந்த நிலையில், தி.மு.க-வின் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார் கல்வியை காவிமயமாக்கும் வகையில் பழனியில் நடைபெற்ற முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள்…

5-வது தீர்மானமாக : “ முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில், நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.”

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

8-வது தீர்மானமாக : “ விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.”

12-வது தீர்மானமாக : “ முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பா.ஜ.க அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை, முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல.

பழநி முத்தமிழ் முருகன் மாநாடு

இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

பழநி: 1,300 ஆய்வுக் கட்டுரைகள், 5 அரங்கங்கள் – பிரமாண்ட முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஹைலைட்ஸ்!



.

Previous Post

“தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும்..!” – அண்ணாமலைக்கு தமிழிசை கோரிக்கை | BJP leader Tamilisai’s response to the Annamalai controversy speech

Next Post

“மக்களை ஏமாற்ற திமுக போடும் நாடகமே முருகன் மாநாடு..!” – வானதி சீனிவாசன் காட்டம் | Vanathi Srinivasan Interview on Current Political Situation

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“மக்களை ஏமாற்ற திமுக போடும் நாடகமே முருகன் மாநாடு..!” – வானதி சீனிவாசன் காட்டம் | Vanathi Srinivasan Interview on Current Political Situation

``மக்களை ஏமாற்ற திமுக போடும் நாடகமே முருகன் மாநாடு..!” - வானதி சீனிவாசன் காட்டம் | Vanathi Srinivasan Interview on Current Political Situation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In