மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர பிரமாண்ட சிலை, சுக்கு நூறாக உடைந்து சேதமடைந்தது.
மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயரமுள்ள சிவாஜி சிலை திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.
கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து, சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.


நமது மக்கள் ஆணையத்தின் இந்த மாத இதழின் முன்பக்க படத்தை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
சிலை செய்வதில் ஊழல் செய்து தர மற்ற சிலையை செய்ததால் தான் சிலை உடைந்து விழுந்து விட்டது. இந்த சிலை விவகாரத்தில் ஊழல் செய்தவர்கள் கைது செய்யப்பட்டால் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது