Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் போட்ட செம பட்டியல்… இதோ..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 24, 2024
in அரசியல் செய்திகள்
1
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் போட்ட செம பட்டியல்… இதோ..
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது; திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அந்த வரிசையில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து தவத்திரு குன்றக்குடி அடிகளாரும்,திருமுருக கிருபானந்த வாரியாரும் பாராட்டினார்கள். இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அதன் அடையாளம்தான், பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருப்பது. அந்த வகையில்,பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாடுஏற்பாடு செய்யப்பட்டவுடனே, அறநிலையத்துறை சார்பாக செய்யப்பட்டு வருகின்ற பணிகளின் பட்டியலை தரச் சொல்லி, அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பட்டியலிட்ட முதல்வர்

  • பழனி,திருத்தணி,திருச்செந்தூர்,மருதமலை,குமாரவயலூர்,சிறுவாபுரி,காந்தல் ஆகிய ஏழு முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை,நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால்,பக்தர்கள் நலனை மனதில் வைத்து,கோயில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி இருக்கிறோம். வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக58.77ஏக்கர் நிலங்களை58கோடியே54 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கி கையகப்படுத்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
  • அறுபடை வீடு முருகன் திருக்கோயில்களில்789கோடியே85 இலட்சம்ரூபாய் மதிப்பீட்டில்251பணிகள் நடைபெற்று வருகிறது.
  • அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோயில்களில்277கோடியே27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்588பணிகள் நடைபெற்று வருகிறது.
  • 69முருகன் திருக்கோயில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டிருக்கிறது.
  • பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற 4000 மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லாத காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட இருக்கிறது.
  • பழனி திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களுக்கு பாதயாத்திரை வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
  • பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற258ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம்3000ரூபாய் என்று வழங்கப்பட்டு வந்ததை4000ரூபாயாக உயர்த்தியும், 54குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு1500ரூபாய் வழங்கப்பட்டதை2000ரூபாயாக உயர்த்தியும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
  • 2024-ஆம் ஆண்டு அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப்பயணத்துக்கு1000பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இதுநாள் வரை813நபர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
  • அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லாத முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்,முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம்5000ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
  • தவில்,நாதஸ்வரக் கல்லுாரி,அர்ச்சகர் மற்றும் வேத ஆகம பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக3000ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை24.11.2023முதல்4000ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
  • பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் தொடர்ந்து5ஆண்டுகள் பணிபுரிந்த13பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலில் பணிபுரிந்து பணிக்காலத்தில் மறைவெய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள்8நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.
  • இதுவரை,திருக்கோயில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த1,298பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 111பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கார்கள்.
  • திருக்கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல்,ஊக்கத்தொகை உயர்வு செய்தல்,தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்த1,298பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது.

நம்பிக்கைகளுக்கு எப்போதும் தடையில்லை

இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். ஏதோ திடீர் என்று பழனியில் மாநாடு நடத்தவில்லை; இப்படிப்பட்ட பணிகளை எல்லாம் செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல,அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.

திராவிட மாடல் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அனைத்து துறை வளர்ச்சி – அனைத்து சமூக வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி – என்று விளக்கிக்கொண்டு வருகிறோம். அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறையையும் மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசரால் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டுச் சின்னங்களான கோயில்கள் முறையாக பாதுகாக்கப்படவேண்டும், முறையாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று சீரோடும், சிறப்போடும் கோயில்கள் இயங்க அடித்தளம் அமைத்தது அந்தச் சட்டம்தான்.

கடந்த மூன்றாண்டில் திமுக அரசு செய்தவை

  • 1,355திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள்.
  • 3ஆயிரத்து776கோடி ரூபாயில்8ஆயிரத்து436திருக்கோயில்களில் திருப்பணிகள்.
  • 50கோடி ரூபாயில் கிராமப்புற ஆதிராவிடர் கோயில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம்.
  • 62கோடியே76லட்சம் ரூபாயில்27திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • 80கோடியே50 இலட்சம் ரூபாயில் பழனி – இடும்பன்மலை,திருநீர்மலை,திருக்கழுக்குன்றம் கோயில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • 5ஆயிரத்து577கோடி ரூபாய் மதிப்புடைய6ஆயிரத்து140ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது.
  • 756திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தினந்தோறும்82ஆயிரம் பேர் உணவு உண்டு வருகிறார்கள்.
  • கோயில் சொத்துகளை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில்1லட்சத்து59ஆயிரத்து507ஏக்கர் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு; 64ஆயிரத்து522கற்கள் நடப்பட்டுள்ளன.
  • 4ஆயிரத்து189ஏக்கர் நிலம்,மீண்டும் கோயில் பெயரில் பட்டா செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு. நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளை,இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டிருக்கிறது. அதில் இருந்து சிலவற்றைதான் நான் இப்போது சொல்லியிருக்கேன். அந்த புத்தகத்தை நீங்கள் எல்லோரும் வாங்கிப் படிக்கவேண்டும். நீங்கள் மட்டுமில்லை;ஊடகத்துறையைச் சேர்ந்த நண்பர்களும் இந்தச் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அந்தச் சாதனைகளுக்கு மகுடம்வைத்தது போல,பழனியில் நடக்கின்ற இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு,இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும்!

மாநாட்டில் பங்கு பெறுவோர் யார்?

  • நீதியரசர்கள்
  • மகா சன்னிதானங்கள்
  • ஆன்மீக பெரியவர்கள்
  • சமய சொற்பொழிவாளர்கள்
  • தமிழ் இலக்கிய அறிஞர்கள்
  • புலவர்கள்
  • பேராசிரியர்கள்
  • பேச்சாளர்கள்
  • இசைக் கலைஞர்கள்
  • நாட்டியக் கலைஞர்கள்
  • பாடகர்கள்

என்று பல்துறை அறிஞர்கள் பழனியில் சங்கமிக்கின்ற இந்த மாநாட்டுக்கு என்னுடைய வாழ்த்துகள்! ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெறவேண்டும்! திருக்கோயில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்! அன்பால் உயிர்கள் ஒன்றாகும்! அறத்தால் உலகம் நன்றாகும்,’’ என்று அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

.

Previous Post

'விமரிசையாக ஆரம்பித்தாரோ இல்லையோ, விமர்சனங்களோடு ஆரம்பித்திருக்கிறார்' – தமிழிசை சௌந்தரராஜன் 

Next Post

திருச்சி எஸ்.பி வருண்குமாரின் குழந்தைகள், குடும்ப பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கொலை மிரட்டல்..சீமான், நாதக நிர்வாகிகள் மீது வழக்கு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருச்சி எஸ்.பி வருண்குமாரின் குழந்தைகள், குடும்ப பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கொலை மிரட்டல்..சீமான், நாதக நிர்வாகிகள் மீது வழக்கு..

திருச்சி எஸ்.பி வருண்குமாரின் குழந்தைகள், குடும்ப பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கொலை மிரட்டல்..சீமான், நாதக நிர்வாகிகள் மீது வழக்கு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In