கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் அடுத்த கோமாலூர் கிராம ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைப்பெற்றது..

ஊராட்சி மன்ற தலைவர் எஸ். மாதுரிதேவி சிவக்குமார் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் சி காமராஜ் தலைமையில் “மக்களுடன் முதல்வர்”எனும் சிறப்பு முகாம் திருக்கோவிலூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமாலூர் சோழவண்டிபுரம் பணப்பாடி கொணக்கலவாடி பொன்னியந்தன் பொ, மெய்யூர் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் கீழ் கோரிக்கை சம்பந்தமாக சுமார் 1800 கும் மேற்பட்ட மனுக்களை அளித்தார்கள்.

இதில் திருக்கோவிலூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எம் ஆர் ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய செயலாளர் அய்யனார் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய பெருங்குழு தலைவர் ஒன்றிய குழு பெருந்தலைவர் துணைத் தலைவர் கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட முகாம் அதிகாரிகள் திருக்கோவிலூர் வட்டாட்சியர் மாரியபிள்ளை ஊரக வளர்ச்சித்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேல் மற்றும் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


❤️❤️❤️❤️❤️❤️