Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பர்கூர்: `தந்தை, மகன் மரணம், உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி?’ – சந்தேகம் கிளப்பும் எடப்பாடி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 24, 2024
in அரசியல் செய்திகள்
1
பர்கூர்: `தந்தை, மகன் மரணம், உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி?’ – சந்தேகம் கிளப்பும் எடப்பாடி..
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பள்ளி மாணவி ‘பாலியல்’ வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், ‘போலி’ என்.சி.சி மாஸ்டருமான சிவராமன், வலது கால் முறிந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், அவரை மருத்துவப் பரிசோதனை செய்ததில், மருத்துவர்கள், கைதுக்கு முன்பு அவர் ‘எலி பேஸ்ட்’ சாப்பிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது.

மேலும் அதே நாளில் சிவராமனின் தந்தையும் மதுபோதையில் சாலையில் உயிரிழந்து கிடந்தார். இந்த மரணங்கள் பரபரப்பையும் சந்தேகங்களையும் கிளப்பியது.  இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. 

மேலும், அவரின் தந்தை அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது. போலி NCC பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது ? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி NCC முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி NCC முகாம்கள் நடத்தி அவர்களுக்கு NCC சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா ? போலி NCC பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் விடியா திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி NCC முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது. பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று பொம்மை முதலமைச்சர் ஸ்டால்ன் அவர்களை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

.

Previous Post

கழிப்பறையை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவா்கள்: பெற்றோா் புகாா்

Next Post

கள்ளர் பள்ளிகள் விவகாரத்தை கையிலெடுத்த அதிமுக; மறுக்கும் திமுக – பரபரக்கும் மதுரை மண்டலம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கள்ளர் பள்ளிகள் விவகாரத்தை கையிலெடுத்த அதிமுக; மறுக்கும் திமுக – பரபரக்கும் மதுரை மண்டலம்!

கள்ளர் பள்ளிகள் விவகாரத்தை கையிலெடுத்த அதிமுக; மறுக்கும் திமுக - பரபரக்கும் மதுரை மண்டலம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    சந்தேகத்தை கிளப்புவது யார் வேண்டுமானாலும் கிளப்பலாம். அதன் உண்மையான முடிவை கண்டுபிடிப்பது தான் யார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In