காங்டாக்: கனமழை காரணமாக சிக்கிமில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, தீஸ்தா நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த 510 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் சிங்டாம் அருகே திப்பு தாரா பகுதியில் இன்று மிகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவினால், தீஸ்தா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த ஹைட்ரோ எலக்ட்ரிக் மின் நிலையம் சேதமடைந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் 17 – 18 வீடுகளும் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
