Thiruvarur oi-Jeyalakshmi C
Updated: Tuesday, June 20, 2023, 15:45 [IST]
திருவாரூர்: ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று திருவாரூரில் நடைபெறுகிறது. திருவாரூரில் ரூ.12 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம். முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் திமுக தொண்டர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர். திருவாரூர் திருவிழா கோலம் பூண்டுள்ளது. திருவாரூர் தேரழகு என்று சொல்வார்கள். ஆழித்தேரின் பிரம்மாண்டத்தை பார்க்க பார்க்க வியப்பாக இருக்கும். அந்த ஆழித்தேரோட்டம் திருவாரூக்கு சிறப்பு என்றால் அதைப்போல சிறப்பாக தனது தந்தையும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக கலைஞர் கோட்டத்தை திருவாரூரில் கட்டியுள்ளார் மு.க. ஸ்டாலின். சென்னையில் வள்ளுவருக்கு நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டினார் கருணாநிதி. திருவாரூர் ஆழித்தேர் போல் அங்கு ஒரு கோவில் தேர் 39 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டது. இது தென்னிந்திய கட்டிடக்கலை நிபுணரான வி. கணபதி ஸ்தபதியின் கைவண்ணத்தில் கட்டப்பட்டது. அதே போல பிரம்மாண்டமாக வரலாற்றில் இடம் பிடிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. மேலும் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. கலைஞர் கோட்டம்.. திருவாரூரில் கூடும் தலைவர்கள்.. அனல் பறக்கும்.. முதல்வர் ஸ்டாலின் பிளான் இதுதான் இந்த கலைஞர் கோட்டம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமையான இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. கருணாநிதி உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அங்கிருந்து அவர், காரில் திருவாரூர் வந்தார். கொட்டும் மழையிலும் முதல்வரை வரவேற்க ஏராளமானோர் காத்திருந்தனர். நேற்று காலை காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கருணாநிதியின் பழைய புகைப்படங்களையும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார் கருணாநிதியின் இளமைக்கால அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், பெரியார், அண்ணா மற்றும் திராவிட இயக்க தலைவர்களோடு கருணாநிதி ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கருணாநிதி பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தனது தந்தைக்காக அதுவும் சொந்த ஊரில் கலைஞர் கோட்டம் அமைத்து இருப்பதை பார்த்து மு.க.ஸ்டாலின் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட பந்தலையும், விழா மேடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திமுகவினர் குவிந்து வருகின்றனர். எதிர்கட்சித்தலைவர்களும் திருவாரூருக்கு வருகை தந்துள்ளனர். இன்றைய தினம் கூட்ட மேடையில் அரசியல் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கட் அவுட்களும் பேனர்களும் விழா மேடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நிதிஷ்குமார் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாட்னாவில் எதிர்கட்சியினர் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்றைய தினம் நிதிஷ்குமாரின் திருவாரூர் வருகை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உடல்நலக்குறைவினார் நிதிஷ்குமாரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
The inauguration ceremony of the Kalaignar Kottam, built in the shape of an Azhither, will be held in Tiruvarur this evening. Kalaignar Kottam has been built on a grand scale in Tiruvarur at a cost of Rs.12 crores. DMK volunteers from all over Tamil Nadu thronged Tiruvarur to participate in this function which was led by Chief Minister and DMK President Stalin.

