திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக இத்தாலி நாட்டில் உள்ள ரோம்நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டு, திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா.





