இந்திய மருத்துவர்கள் சங்கத்தின்(ஐஎம்ஏ) தேசியத் தலைவர் மருத்துவர் ஆர்.வி. அசோகன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலையைத் தொடர்ந்து, மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மருத்துவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்தை சுட்டிக்காட்டி அதில் கூறப்பட்டுள்ளதாவது, “நாம் ஒரே தேசமாக ஒன்றுதிரண்டு, அந்த பெண் மருத்துவர் உயிரிழந்தாலும் அவர் மாய்ந்துவிட நாம் அனுமதிக்கவில்லை. மருத்துவர் கொலையின் எதிரொலியாக நாடெங்கிலும் ஆத்திரம், கோபம், உதவி செய்ய இயலாத கையறு நிலை என பல்வேறு உணர்வுகள் நிலவுகின்றன.
