Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு: நிதி ஆயோக் அறிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு: நிதி ஆயோக் அறிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் கல்வித்தரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான மதிப்பீட்டில் கேரளா 82 உடன் முதலிடத்திலும், ஹரியானா மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் 77 பெற்று அடுத்தடுத்த இடத்திலும், தமிழ்நாடு 76 பெற்று நான்காம் இடத்திலும் இருக்கின்றன.

இந்த மதிப்பீட்டில் குஜராத் 58 மட்டுமே பெற்று ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் கீழிடங்களில் உள்ளது.

குஜராத் மாநில அரசு பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘ஷாலா பிரவேஷோத்சவ்’ என்ற பெயரில் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தை நடத்தி வருகிறது. அங்குள்ள மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று எந்தக் குழந்தையும் விடுபடாமல் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது .

இவ்வளவு முயற்சிகள் செய்தும், 1 – 8 வகுப்பில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 89% ஆக உள்ளது. ஆனால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் 100 சதவீத சேர்க்கைகளையும், ஆந்திரப் பிரதேசம் 96.9% சேர்க்கைகளையும் பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் ஜனநாயகத்தின் வேர்களை மேலும் வலுப்படுத்தும்: அமித் ஷா

மறுபுறம், மாணவர் சேர்க்கை 100% இல்லாமல், மேல்நிலைப் படிப்பை இடைநிறுத்தும் மாணவர்கள் விகிதம் அதிகரித்துள்ளது. 1980 – 1990களின் இடைநிற்றல் விகிதத்துடன் ஒப்பிடும்போது, ​​ தற்போது இடைநிற்றல் குறைந்துள்ளதாகக் கூறப்படும் குஜராத்தில் 17.9% கல்வி இடைநிற்றல் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. கேரளா, ஹரியானா போன்ற மாநிலங்களில் கூட இடைநிற்றல் விகிதம் 5.5% மற்றும் 5.9% அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், உயர்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 81% மற்றும் 85% உள்ள நிலையில், குஜராத்தில் வெறும் 48.2% மட்டுமே சேர்க்கை உள்ளது.

குஜராத்தில் 99.93% பள்ளிகளில் அடிப்படை வசதிகளான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி உள்ளது. 98% பள்ளிகளில் கணிணி வசதியும், 97% பள்ளிகளில் பயிற்சி பெற்ற மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அரசு நடத்தும் 1,606 தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தது. கடந்த 2022 இல் 700 பள்ளிகளில் இதுபோன்று இருந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் இதனை இரட்டிப்பக்கியதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பைப் பரப்பும் மோடி: மனித உரிமைகள் கண்காணிப்பகம்!



.

Previous Post

Bangladesh: `வங்கதேசத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை’- மோடியிடம் பேசிய முஹம்மது யூனுஸ் | PM Modi receives call from Bangladesh leader Muhammad Yunus

Next Post

பிரீமியம் தட்கல் ரயில் டிக்கெட்டின் கட்டணம் விமான டிக்கெட்டை விட விலை அதிகமாம்! | Travelling in premium tatkal is costlier than some of the air tickets – why it is so

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரீமியம் தட்கல் ரயில் டிக்கெட்டின் கட்டணம் விமான டிக்கெட்டை விட விலை அதிகமாம்! | Travelling in premium tatkal is costlier than some of the air tickets – why it is so

பிரீமியம் தட்கல் ரயில் டிக்கெட்டின் கட்டணம் விமான டிக்கெட்டை விட விலை அதிகமாம்! | Travelling in premium tatkal is costlier than some of the air tickets – why it is so

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In