மத்திய அறிவியல் அமைச்சர் இஸ்ரோவுக்கு பாராட்டு:
எஸ்.எஸ்.எல்.வி-டி3/இஓஎஸ்-08 மிஷனை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோ குழுவினரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எஸ்.எஸ்.எல்.வி-டி3/இஓஎஸ்-08 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ குழுவுக்கு பாராட்டுகள். பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீடு மற்றும் ஆதரவுடன், இஸ்ரோ குழுவால் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிகளை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முடிந்தது.
