Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நகராட்சிகளை `மாநகராட்சி'களாக தரம் உயர்த்துவதன் பயன்கள் என்னென்ன?!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2024
in அரசியல் செய்திகள்
1
நகராட்சிகளை `மாநகராட்சி'களாக தரம் உயர்த்துவதன் பயன்கள் என்னென்ன?!
27
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதற்கான ஆணைகளை புதிய மாநகராட்சிகளின் மாமன்றத் தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். மேலும், `தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்!’ என்றும் சிலாகித்திருக்கிறார். இந்த நிலையில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து அலசினோம்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசின் அறிவிப்பிலேயே நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதனால் ஏற்படும் நன்மைகள், அதற்கான தேவைகள் குறித்து விரிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஏன் மாநராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும்?

“தமிழகம் நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.

தி.மு.க-வின் மூன்றாண்டு ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள்:

இதன்படி, தி.மு.க அரசால் கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.

நாமக்கல்

புதிதாக நான்கு மாநகராட்சிகள்:

இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்குதற்கான நடைமுறைகளை தொடங்கிட தற்போது ஆணையிடப்பட்டிருக்கிறது. இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து 15.3.2024 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டன.

இதனால் ஏற்படும் பயன்கள் என்ன?

இதனடிப்படையில், அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு

1998-ஆம் ஆண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்படும். இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்!” என தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

.

Previous Post

பதறும் கொங்கு மண்டல சீனியர்கள் முதல் கமிஷனை வசூலிக்க மூவர் குழு!.

Next Post

நாளை மருத்துவா்கள் வேலை நிறுத்தம்: -ஐ எம் ஏ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாளை மருத்துவா்கள் வேலை நிறுத்தம்: -ஐ எம் ஏ

நாளை மருத்துவா்கள் வேலை நிறுத்தம்: -ஐ எம் ஏ

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    பொது மக்களுக்கு நல்லது கிடைக்கிறதோ இல்லையோ முதலில் வீட்டு வரிகள் குடிநீர் வரிகள் அனைத்தும் பல மடங்கு உயர்த்தப்படும் குடிநீர் இணைப்பு கட்டணம் கழிவு நீர் இணைப்பு கட்டணம் அதிகமாகக்கப்படும் விவசாய விலையின் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறும். எனவே விவசாயம் தானாகவே குறைந்து விடும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In