Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஸ்டார்ட் அப் தொடங்குவதில் இந்தியா முதலிடம் – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பெருமிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 20, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஸ்டார்ட் அப் தொடங்குவதில் இந்தியா முதலிடம் - மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வேலூர்: மற்ற நாடுகளைவிட ஸ்டார்ட் அப் தொழில்கள் தொடங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 417 முனைவர் பட்டங்களையும், இளங்கலையில் சிறப்பிடம் பிடித்த 70 பேர், முதுகலையில் 77 பேருக்கு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் ஆண்டறிக்கையை வாசித்தார்.

தொடர்ந்து, மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் முதன்மை விருந்தினராக பங்கேற்று பேசும்போது, ‘மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாறும்போது வாழ்க்கை பிரகாசிக்கும்.

மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி இளைஞர்களை நம்பியுள்ளது. இந்தியா மற்ற நாடுகளைவிட ஸ்டார்ட் அப் தொழில்கள் தொடங்குவதில் முதலிடத்தில் உள்ளது. 132 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 61 வகையான தொழில்களில் 1,031 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். இவற்றின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கரோனா காலத்துக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலையை நம்பி இருக்கக்கூடாது. சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்’ என்றார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மூலம் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பதிவாளர் (பொறுப்பு) விஜயராகவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

.

Tags: அபஅமசசரஇணஇநதயதடஙகவதலபரமதமமததயமதலடமவ.க.சஙஸடரட
Previous Post

உங்க கிட்ட பான் கார்டு இருக்குல்ல.. ரூ.101 இருக்குல்ல.. அப்ப இதை சீக்கிரமா முடிங்க.. சின்ன வேலைதான்

Next Post

பாஜகவை “வேரோடு” அகற்றுவோம்..தலைவரை பேசி முடிவெடிப்போம்..சொல்வது டி.ராஜா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜகவை “வேரோடு” அகற்றுவோம்..தலைவரை பேசி முடிவெடிப்போம்..சொல்வது டி.ராஜா

பாஜகவை "வேரோடு" அகற்றுவோம்..தலைவரை பேசி முடிவெடிப்போம்..சொல்வது டி.ராஜா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In