அமெரிக்க எழுத்தாளர் மால்கம் ப்ரென்னர் ஒரு டால்பினுடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியிருப்பது, சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயதான எழுத்தாளர் மால்கம் ப்ரென்னர், `வெட் காடெஸ்’ என்ற புத்தகத்தை, கடந்த 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார்.
இந்தப் புத்தகத்தில் மால்கம், விலங்குகளின் மீது காதல் கொள்பவரான `ஸூபைல்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், `வெட் காடெஸ்’ புத்தகத்தில் அவர் கூறியுள்ள `டால்பினுடனான காதல்’ பற்றிய குறிப்பு, 14 ஆண்டுகளுக்குப் பிறகு பேசுபொருளாகி உள்ளது.
புத்தகத்தில் மால்கம் கூறியிருப்பதாவது, “ என்னுடைய 20 ஆவது வயதில், ஃபுளோரிடாவின் சரசோட்டாவில் உள்ள ஒரு தீம் பூங்காவின் குளத்தில் புகைப்படங்கள் எடுக்க, எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, டால்பின்களுடன் நீந்தவும் அனுமதியளிக்கப்பட்டது.
