Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை
Tamil Live Breaking News : – ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்
பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.
ஹசீனா தஞ்சம் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடந்து வருகிறது. இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை நடக்கிறது. லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள், உயரதிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. இதில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
வெளியுறவு அமைச்சருடன் தமிழக மீனவர்கள் சந்திப்பு
டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழ்நாடு மீனவப் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றார்.
காஸியாபாத்தில் ஷேக் ஹசீனா
வங்கதேச விமானப்படை விமானத்தில் இருந்து ஷேக் ஹசீனா உத்தரப் பிரதேசம் காஸியாபாத் வந்தார். காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனா தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு
ஷேக் ஹசீனா டெல்லி வருவதாக கூறப்படும் நிலையில் இந்திய எல்லையை ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அந்தவகையில் ஷேக் ஹசீனா வரும் சி-130 விமானத்தை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பத்தூர், ராமநாதபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி
பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் அணி பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா அடங்கிய இந்திய அணி 3-2 என்ற ஆட்டக் கணக்கில் ரோமானிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இடைக்கால அரசை அமைத்த வங்கதேச ராணுவம்
வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் இடைக்கால அரசையும் அமைத்துள்ளது.
முஜிபுர் ரகுமான் சிலை உடைப்பு
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் தந்தையும், நாட்டின் முதல் அதிபருமான முஜிபுர் ரகுமான் சிலையை போராட்டக்காரர்கள் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஷேக் ஹசீனா லண்டனுக்கு தப்பியோட்டம்
வங்கதேசத்தில் இருந்து தப்பித்து திரிபுரா தலைநகர் அகர்தலா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து லண்டனுக்கு தப்பித்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது – வங்கதேச ராணுவ தளபதி
வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கவுள்ளதாக வங்கதேச ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமா தெரிவித்துள்ளார். அதேபோல் ராணுவம் மீது வங்கதேச மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், வங்கதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்ககூடாது என்றும் வங்கதேச ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமா தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் ஷேக் ஹசீனா தஞ்சம்
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது திரிபுராவில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால ஆட்சி
வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பிரதமர் நாட்டை விட்டு தப்பிய நிலையில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வங்கதேசம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திற்குள் போராட்டக் குழுவினர் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் உற்சாக முழக்கங்களுடன் பிரதமர் இல்லத்தில் நுழைந்தனர்.
மாணவர்கள் போராட்டம் – வங்கதேச பிரதமர் ஹசீனா ராஜினாமா?
வங்கதேசத்தில் புரட்சியை தொடர்ந்து பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சற்று நேரத்தில் வங்கதேச ராணுவ தளபதி மக்களிடம் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் உச்சம் அடைந்த நிலையில் பிரதமர் ஹசீனா ராஜினாமா செய்து டாக்காவில் இருந்து வெளியேறி நாட்டை விட்டு தப்பியதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில்பாலாஜி வழக்கு – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
ஓட்டுநர், பொறியாளர் வேலைகளுக்கு பணம் பெற்றதாக எக்ஸல் பைலில் தரவுகள் இருந்தன என்று செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றசாட்டியுள்ளது. மேலும் அதில் உள்ள தரவுகளுக்கு செந்தில் பாலாஜி தரப்பு உரிய பதில் தரவில்லை எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மேயர் தேர்தலில் ராமகிருஷ்ணன் வெற்றி
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ளார். 54 வாக்குகள் பதிவான நிலையில் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Tamil Live Breaking News : கோவை திமுக மேயர் வேட்பாளர் அறிவிப்பு
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு.
திமுக கவுன்சிலர்களுடன் அமைச்சர் கே.என்.நேரு நடத்திய ஆலோசனைக்கு பிறகு முடிவு.
Tamil Live Breaking News : தங்கம் விலை உயர்வு
இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,470க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,760க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 91.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 91,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Live Breaking News : வயநாடு பலி எண்ணிக்கை 369ஆக உயர்வு
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 369ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 7ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tamil Live Breaking News : பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
Tamil Live Breaking News : சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும்
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
சென்னையில் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
Tamil Live Breaking News : காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
- First Published :
