Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

என் குடும்பம் எங்க இருக்கு.. வயநாட்டில் சொந்தங்களை தேடும் முதியவர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2024
in அரசியல் செய்திகள்
0
என் குடும்பம் எங்க இருக்கு.. வயநாட்டில் சொந்தங்களை தேடும் முதியவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வயநாட்டில் ஜூலை 29 நள்ளிரவில் பெய்த அதிகனமழை மற்றும் நிலச்சரிவால் பூஞ்சேரிமட்டம், முண்டக்கை, சூரல்மலை கிராமங்கள் சிதைத்துவிட்டன. இதனால், குழந்தைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்ப உறுப்பினரை இழந்தவர்கள் என ஒவ்வொருவரும், தங்களது உறவுகள் எங்காவது ஒரு மூலையில் தப்பிப் பிழைத்திருக்க மாட்டார்களா என ஒரு வாரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி, உறவுகளை தொலைத்துவிட்டு உருக்குலைந்த கிராமத்திற்குள், கண்ணீருடன் உலவுகிறார் முதியவர் ஒருவர். முண்டக்கை கிராமத்தில் மனைவி, மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த முதியவர் கருப்பையா, தற்போது அனைத்து உறவுகளையும் தொலைத்துவிட்டு, அவர்கள் கிடைப்பார்களா என ஏக்கத்துடன் தேடி வருகிறார்.

விளம்பரம்

முகாம்களில் அங்குலம் அங்குலமாக அலசியும் அவர்களைக் காண முடியாததால், மண்மேடுபோல மாறிப் போன தனது கிராமத்தில் எங்காவது கிடைப்பார்களா என தள்ளாத வயதிலும் தளராமல் தேடிக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை அவர்கள் இறந்திருந்தால், கடைசியாக ஒருமுறை உடலை மட்டுமாவது பார்த்துவிட வேண்டும் என கண்களில் உறக்கமின்றி, பொக்லைன் இயந்திரங்கள் பூமியைக் கிளறுவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த 71 வயது முதியவர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், காணும் இடமெல்லாம் இதயத்தை ரணமாக்கும் காட்சிகள் நிறைந்திருக்கும் நிலையில், சற்று ஆறுதலான நிகழ்வுகளும் நம்பிக்கையை மீட்டெடுக்கின்றன.

ஆறு நாள் தேடுதலுக்கு பிறகு, தான் தூக்கி வளர்த்த செல்லப்பிராணியை கண்டுபிடித்த பெண்மணி, அதனை கட்டியணைத்து, கொஞ்சி, அன்பைப் பொழிந்தார். தன்னை வளர்த்தவரை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் அந்த நாய் பாசத்துடன் விளையாடி மகிழ்ந்தது. எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது என்பதைப் போல, 6 நாட்களாக தவித்த இதங்கள் சங்கமித்த இந்த நிகழ்வு, பேரழிவில் இருந்து மீளும் நம்பிக்கை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

விளம்பரம்

.



.

Previous Post

பொதுமக்களின் புகாா் நடவடிக்கை விரைவில் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்படும்: ஆணையா் தகவல்

Next Post

நெய் விலையில் தள்ளுபடி: ஆவின் அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நெய் விலையில் தள்ளுபடி: ஆவின் அறிவிப்பு

நெய் விலையில் தள்ளுபடி: ஆவின் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In