மேலும், மொபைல் போனிலிருந்து வரும் சத்தத்தைத் தவிர்ப்பதற்காக, விமானப் பயன்முறையில், கழிவறை இருக்கையை நோக்கியவாறு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கேமராவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக, சுமார் 2 மணிநேரமாக கழிவறையை, கேமரா படம்பிடித்துள்ளது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, பேக்கரி நிர்வாகத்திடம் ரகசிய கேமரா குறித்து, அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மொபைல் போனின் உரிமையாளரான, பேக்கரியில் பணிபுரியும் ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பேக்கரி நிர்வாகம், அவரை பணி நீக்கம் செய்ததுடன், அவர்மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தது.
