இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு மனு மீதான விசாரணை தொடங்கும் என்றும், விசாரணை தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா். ஆனால், அந்த மனுவை கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என மாற்றிக்கொண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த தகவலை இந்திய ஒலிம்பிக் சங்கத்தைச் சோ்ந்த தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிசெய்திருந்தன.
பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அதை தீா்த்து வைப்பதற்காக அங்கு சா்வதேச விளையாட்டு நடுவா் நீதிமன்றத்தின் இடைக்கால அமா்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
