Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வழிபாடு குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு – தி.மலையில் இளைஞர்கள் இருவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
வழிபாடு குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு - தி.மலையில் இளைஞர்கள் இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேட்ட வலம் அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் கதிர்வேல் மகன் தங்கராசு (29).

இவர், கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களும் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் துறைக்கு மனு அளித்துள்ளதாகவும், இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு வேறு தரப்பை சேர்ந்த ராஜாராம் மகன் செந்தமிழ் (33) எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் முகநூல் பதிவு மூலமாக தொடர்ந்து மோதல் இருந்துள்ளது. இந்நிலையில், செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே தங்கராசுவுக்கும் செந்தமிழுக்கும் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. செந்தமிழுக்கு ஆதரவாக உத்திரகுமார் செயல்பட்டுள்ளார். இவர்களது மோதலை கிராம மக்கள் தடுத்துள்ளனர்.

மோதலில் காயமடைந்ததாக தங்கராசு மற்றும் செந்தமிழ் ஆகியோர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செந்தமிழை வேட்டவலம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் உத்திரகுமார் தேடப்பட்டு வருகிறார். இதேபோல், செந்தமிழ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தங்கராசு கைது செய்யப்பட்டுள்ளார்.

.

Tags: இரவரஇளஞரகளஃபஸபககலகதகறததத.மலயலபதவவழபட
Previous Post

Anbumani: கார்களுக்கு சாலை வரியை உயர்த்துவது அநீதி..உடனே கைவிடுக – அன்புமணி வலியுறுத்தல்!-anbumani ramadoss urges to state government for reduce road tax

Next Post

சென்னையில் கார், பைக் ஓட்டும் போது.. தப்பி தவறி கூட இந்த தவறை பண்ணிடாதீங்க.. பாயும் ஆக்சன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையில் கார், பைக் ஓட்டும் போது.. தப்பி தவறி கூட இந்த தவறை பண்ணிடாதீங்க.. பாயும் ஆக்சன்!

சென்னையில் கார், பைக் ஓட்டும் போது.. தப்பி தவறி கூட இந்த தவறை பண்ணிடாதீங்க.. பாயும் ஆக்சன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In