சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 88 புதிய தாழ்தள பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீல நிறத்தில் உள்ள இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு சிறப்பு படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
நீல நிறத்தில் விடப்பட்டு உள்ள இந்த பேருந்துகளில் தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் ஏறுவதற்கு சிறப்பு சாய் தளம், சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய தாழ்தள பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலை வகித்தார்.
மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன் மற்றும் அதிகாரிகள் புதிய பேருந்தில் ஏறி சிறிது தூரம் வரை பயணம் செய்தனர்.
பிராட்வே, கிளாம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, திருப்போரூர், திருவொற்றியூர், திருவேற்காடு, தி.நகர், மகாபலிபுரம், திருவான்மியூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, கோவளம் உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பேருந்து தயாரிக்கப்படும் போது உள்ளே இருக்கும் பயணிகளுக்கு நல்ல காற்றோட்டம் இருப்பதற்காக ஜன்னல்களின் அளவை பெரியதாக வைக்க வேண்டுகிறேன். மேற்கூறையிலும் திறந்து மூடும் வசதியுள்ள ஜன்னல்கள் வைக்க வேண்டும். பஸ்சை டிசைனிங் செய்கிறேன் என்கிற பெயரில் ஜன்னல்களின் அளவை குறைத்து வைத்து விடுகின்றனர் எனவே உள்ளே இருக்கும் பயணிகளுக்கு சரியான காற்றோட்டம் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர் இது எனது கோரிக்கை அல்ல நான் பஸ் பயணிகளிடம் பேசுகிற போது அவர்கள் வைக்க கோரிக்கை. நமது அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்