வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைப் பராமரிப்பதற்காக 1954-ல் உருவாக்கப்பட்ட வக்ஃப் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து, வாரியத்தின் அதிகாரங்களை குறைக்க மத்திய அரசு முடிவு
மசூதிகளுக்கு கொடையாக வழங்கப்பட்ட மசூதிகளின் பெயரில், நிர்வாகத்தில் உள்ள சொத்துகளே வக்ஃப் சொத்துகள் எனப்படும்
இந்த வக்ஃப் சொத்துக்களை கையாள்வதற்கு 1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத்தின் மூலம் பல்வேறு மாநிலங்களில் வக்ஃப் வாரியங்கள் உருவாக்கப்பட்டன
வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய மாற்றத்தால், வாரியம் எந்த சொத்தையும் வக்ஃப் சொத்தாக மாற்ற முடியாது
சட்டத்தில் செய்யப்படும் 40 திருத்தங்களுக்குப் பிறகு, வக்ஃப் வாரியங்களின் சொத்துகள் கட்டாய சரிபார்ப்பில் ஈடுபடுத்தப்படும்
இந்த சட்ட திருத்த மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்

😜😜😜😜