Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விட்ட டெண்டர் ரத்து; 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்- பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 4, 2024
in அரசியல் செய்திகள்
1
மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விட்ட டெண்டர் ரத்து; 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்- பின்னணி என்ன?
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கண்ணன். ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ளார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக கண்ணன் உள்ளார். இதில் மொத்தமுள்ள 20 கவுன்சிலர்களில் அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர், திமுக கவுன்சிலர்கள் 5 பேர் உள்ளனர்.

கண்ணன்

இதனால் ஒன்றிய தலைவர் பதவியை அதிமு-கவைச் சேர்ந்த கண்ணன் பெற்றார். இந்நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர் திமுக-வில் இணைந்ததால் அதிமுக பலம் குறைந்தது. இதனால் தலைவர் பதவிக்கு நெருக்கடி உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ஜூன் 25-ம் தேதி 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. இதில் மன்ற ஒப்புதல் பெறாமல் நத்தம் ஊராட்சி ஒன்றியத் தலைவரும் அதிமுக நிர்வாகியுமான கண்ணன் தனிச்சையாக செயல்பட்டு அனுமதி அளித்துள்ளார் என புகார் எழுந்தது. இவ்விவகாரத்தை மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உட்படுத்தினார்.

நத்தம் ஒன்றிய அலுவலகம்

அந்த புகார் மீது முகாந்திரம் இருந்ததை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஊராட்சி ஒன்றிய தலைவரின் செயலுக்கு உடந்தையாக செயல்பட்டு அனுமதி அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிதேவி, அலுவலக கணக்காளர் சிவக்குமார், அலுவலக உதவியாளர் கனகலட்சுமி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

.

Previous Post

இன்று நல்ல நாள்!

Next Post

பேசித் தீர்க்க சொன்ன மோடி; 38 முறை பேசியும் வழிக்கு வராத கர்நாடகா…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேசித் தீர்க்க சொன்ன மோடி;  38 முறை பேசியும் வழிக்கு வராத கர்நாடகா…

பேசித் தீர்க்க சொன்ன மோடி; 38 முறை பேசியும் வழிக்கு வராத கர்நாடகா...

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்த நான்கு அதிகாரிகளையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In