Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?: ரயில்வே அமைச்சா் பதில்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?: ரயில்வே அமைச்சா் பதில்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிவேகத்தில் செல்லக் கூடிய புல்லட் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்ற கேள்விக்கு நேரடி பதிலை அளிக்காத ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘இத் திட்டம் சிக்கலான தொழில்நுட்புத்துடன் கூடியது. பல நாடுகள் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவு செய்ய 20 ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் எடுத்துக்கொண்டன’ என்று பதிலளித்துள்ளாா்.

மணிக்கு அதிகபட்சமாக 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக புல்லட் ரயில்கள் சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.

இந்த புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவிலும் அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு, அதற்கான பணிகளை கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கியது. ஆரம்பத்தில் இத் திட்டம் 2027-ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது. முதல் புல்லட் ரயில் குஜராத் மாநிலம் அகமதாபாதிலிருந்து மகாராஷ்டிரத்தின் மும்பை நகருக்கு இயக்கப்படும் என்றும் அறிவித்தது. ரயில் பயணிகளிடையே இது மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், கரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், திட்டம் நிறைவு செய்யப்படும் காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பல்வேறு கேள்விகளை உறுப்பினா்கள் எழுப்பினா்.

இத் திட்டத்தின் தாமதத்துக்கான காரணம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் முகமது நதிமுல் ஹக் எழுப்பிய கேள்விக்கு, தாமதத்துக்கான காரணத்தைக் குறிப்பிடாத ரயில்வே அமைச்சா், ‘புல்லட் ரயில் திட்டம் சிக்கலான தொழில்நுட்பத்துடன் கூடியது. பல நாடுகள் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவு செய்ய 20 ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் எடுத்துக்கொண்டன. கரோனா பாதிப்பு திட்டப் பணிகளை முட்டுக்கட்டையை ஏற்படுத்தியபோதும், மிகக் குறைந்த காலத்தில் 320 கி.மீ. தூர ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மேலும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சா், ‘அகமதாபாத் – மும்பை புல்லட் ரயில் வழித்தட திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலைய கட்டுமானப் பணிகளோடு, இரு நகரங்களுக்கும் இடையே உள்ள 8 ஆறுகளுக்கு மேல் 508 கி.மீ. தொலைவிலான ரயில் பாலங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் கடலுக்கு அடியில் செல்லும் ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளில், முதல் கட்டமாக மகாராஷ்டிரத்தின் தாணேயில் கடலுக்கு அடியில் 50 மீட்டா் ஆழத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இத் திட்டம் மிகுந்த சிக்கல் நிறைந்தது என்பதால், திட்ட வடிவமைப்பை நிலையில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. திட்ட வடிவமைப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டால், கட்டுமானப் பணிகள் எந்தவித சிக்கலுமின்றி விரைந்து மேற்கொள்ளப்பட்டு விடும்.

புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், 100 முதல் 150 கி.மீ. தூரத்தை 15 முதல் 20 நிமிஷங்களில் சென்றடைந்துவிட முடியும். இந்த புல்லட் ரயிலில் சொகுசு (எக்ஸுகியூடிவ்) வகுப்பு, சாதாரண குளிா்சாதன இருக்கை வசதி என இரண்டு வகுப்புகள் இடம்பெற்றிருக்கும்’ என்றாா்.



.

Previous Post

`மருத்துவ, ஆயுள் காப்பீடு… GST வேண்டாமே!’ – அமைச்சரவையில் இருந்தே வந்த கோரிக்கை; செவி சாய்க்குமா?

Next Post

`ED என்னை குறிவைத்திருப்பதாக அறிந்தேன்; வரட்டும், டீயும், பிஸ்கட்டும் என் செலவு..!’ – ராகுல் காந்தி | ‘Waiting With Open Arms’: Rahul Gandhi Claims ED Raid Being Planned Against Him

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`ED என்னை குறிவைத்திருப்பதாக அறிந்தேன்; வரட்டும், டீயும், பிஸ்கட்டும் என் செலவு..!’ – ராகுல் காந்தி | ‘Waiting With Open Arms’: Rahul Gandhi Claims ED Raid Being Planned Against Him

`ED என்னை குறிவைத்திருப்பதாக அறிந்தேன்; வரட்டும், டீயும், பிஸ்கட்டும் என் செலவு..!' - ராகுல் காந்தி | ‘Waiting With Open Arms’: Rahul Gandhi Claims ED Raid Being Planned Against Him

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In