Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பத்தூர்: சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு… ஆபத்தை உணர்வார்களா?! | Well in open state, may cause damage in thirupathur

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 3, 2024
in அரசியல் செய்திகள்
0
திருப்பத்தூர்: சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு… ஆபத்தை உணர்வார்களா?! | Well in open state, may cause damage in thirupathur
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பத்தூர் மாவட்டம் , சோலையார்பேட்டை அடுத்த குட்டிகாம்ப வட்டம் அருகாமையில் அமைந்துள்ளது அந்த கிணறு. பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் நடந்தும்,சைக்கிளிலும், வாகனங்களிலும் செல்லும் அந்த சாலையின் மிக அருகில், தடுப்புச் சுவர் கூட இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கிறது அந்த கிணறு.

இது குறித்து அப்பகுதியில் செல்பவர்களிடம் விசாரித்த போது, இந்த கிணறு சில மாதங்களுக்கு முன்பாக தோண்டப்பட்டது தெரிய வந்தது. கிணறு சாலையின் அருகாமையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்னால் நடவடிக்கை வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

பாதசாரிகளும், பள்ளி மாணவர்களும் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள அந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த கிணறு எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் திறந்த வெளியில் காணப்படுவது ஆபத்தானது. அருகில் வீடுகள் கூட இல்லாத நிலையில், ஏதாவது நிகழ்ந்தால், உதவிக்கு கூட உடனே யாரையும் அழைக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் இவ்விடத்தில் தண்ணீர் தேங்கும் அபாயமும் உள்ளது. மழைக்காலத்தில் மேலும் தெளிவில்லாத நிலை ஏற்படும். அப்போது வாகன ஓட்டிகள் கூட தவறி விழ வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதை குறித்து அந்த ரெட்டியூர் பஞ்சாயத்துத் தலைவர் மூர்த்தியிடம் பேசினோம், `கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் அது தோண்டப்பட்டது. விவசாய தேவைகளுக்காக தனிநபரால் தனியார் இடத்தில் தோண்டப்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது தான். இது தொடர்பான அந்நபரிடம் பேசி தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று கூறினார்.

“விபத்து ஏதும் நடக்கும் முன்னர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

Rain Update: ‘இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு’: வானிலை ஆய்வு மையம் தகவல்-according to the meteorological department there is a chance of light to moderate rain with thunder and lightning

Next Post

பலி எண்ணிக்கை 346 ஆக உயர்வு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பலி எண்ணிக்கை 346 ஆக உயர்வு

பலி எண்ணிக்கை 346 ஆக உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In