இரவு 11.25 மணிக்கு புறப்படும் மதுரை – புனலூர் ரயில் ஆக. 5,8 தேதிகளில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். மறுவழித்தடத்தில் இயக்கப்படும் புனலூர் – மதுரை ரயில் ஆக. 6,9 தேதிகளில் மாலை 5.15 மணிக்கு நெல்லையில் இருந்து இயக்கப்படும்.
குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயில் ஆக. 4,5,8,10 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மதுரை செல்லாமல் விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்தடையும்.
சென்னை – குருவாயூர் ரயில் ஆக. 8 ஆம் தேதி திண்டுக்கல், மதுரை வழியே செல்லாது.
மேலும், திருச்சி – காரைக்குடி, மயிலாடுதுறை – செங்கோட்டை, கொச்சுவேலி – மங்களூரு, சென்னை – திருவனந்தபுரம், ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளது.
