Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கழுகார்: `மலை போய் நயினாரா..!’ தமிழிசைக்கு ‘கீ’ கொடுக்கும் சீனியர்கள் முதல் கடுப்பில் உதயகுமார் வரை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2024
in அரசியல் செய்திகள்
0
கழுகார்: `மலை போய் நயினாரா..!’ தமிழிசைக்கு ‘கீ’ கொடுக்கும் சீனியர்கள் முதல் கடுப்பில் உதயகுமார் வரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புலம்பலில் பழக் கட்சி மணியானவர்!“திரும்பத் திரும்ப அவமானம்…”

பழக் கட்சியில் பெரியவருக்கும் சின்னவருக்குமான ஈகோ மோதலில், கடுமையாக பாதிக்கப்படுபவர் ‘மணியான’ தலைவர்தானாம். அப்பாவின் விசுவாசி என்பதால், அப்பா மீதான கோபத்தையும் எரிச்சலையும் இவரிடம் காட்டுவதையே வழக்கமாக வைத்திருக்கிறாராம் சின்னவர். “கட்சி தொடங்கிய நாளிலிருந்து உடனிருக்கிறேன். பெரிதாகப் பதவி சுகத்தை அனுபவிக்கவில்லையென்றாலும், இதுவரை ‘கௌரவமாக’த்தான் இருந்தேன். ஆனால், சமீபகாலமாகவே, சின்னவர் பொதுவெளியில் மீண்டும் மீண்டும் என்னை அவமானப்படுத்துகிறார்” என்று தோட்டத்துத் தரப்பிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார் ‘மணியான’ தலைவர். அதற்கு, ‘கட்சிரீதியான முடிவை சின்னவர் எடுக்கும்போது, நீங்க ஏன் தேவையில்லாம மூக்கை நுழைக்கிறீங்க. அதுதான் அவருக்குக் கோபம். நீங்கபாட்டுக்கு அமைதியா இருங்க. அவர் ஒண்ணுமே செய்ய மாட்டாரு’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்களாம் தோட்டத்துக்காரர்கள்!

கடுப்பில் உதயகுமார்!எதிராகத் தூபம் போட்ட நிர்வாகிகள்…

எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒரு பக்கம் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, மறுபக்கம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக யார் யாரைத் தேர்வுசெய்யலாம் என்கிற பேச்சும் நடக்கிறதாம். அதன்படி, உசிலம்பட்டி தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரனின் பெயரை சிபாரிசு செய்தாராம் முன்னாள் அமைச்சர் உதயகுமார். ஏனென்றால், இப்போது சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஐயப்பன், ஓ.பி.எஸ் அணிக்குச் சென்றுவிட்டார்.

ஆர்.பி. உதயகுமார்

உதயகுமாரின் சிபாரிசு குறித்துக் கேள்விப்பட்ட உதயகுமாருக்கு எதிர் டீம், “ஓ.பி.எஸ் பக்கம் தாவிய ஐயப்பனே, உதயகுமார் தேர்வுசெய்த ஆள்தான். அவர் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் யாரும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். அதுவும், அவர் இப்போது பரிந்துரைத்திருக்கும் மகேந்திரன், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் சரியாக வேலை பார்க்காதவர். அவரது சொந்த பூத்திலேயே அ.தி.மு.க குறைவாகத்தான் ஓட்டு வாங்கியிருக்கிறது” என்று தலைமையிடம் தூபம் போட்டுவிட்டார்களாம். இதனால், ஏக கடுப்பில் இருக்கிறாராம் உதயகுமார்!

பொருள்களை வாங்கிக்குவிக்கும் பெண் அதிகாரி!வெளிநாட்டுப் பயணம்…

‘செல்வமான’ சீனியர் அமைச்சர் ஒருவர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார். துறை சார்ந்து அவரோடு வெளிநாட்டுக்குப் பறந்திருக்கும் மூத்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ஷாப்பிங் என்ற பெயரில் பொருள்களை அங்கே வாங்கிக் குவிக்கிறாராம். அமைச்சரும் அதற்குப் பச்சைக்கொடி காட்டியதால், பெரிய அளவில் பர்ச்சேஸ் செய்துவிட்டாராம் அந்தப் பெண் அதிகாரி. இந்த ‘ஷாப்பிங் செலவுக் கணக்குகள் அனைத்தையும் பயணச் செலவோடு சேர்த்திருப்பதால், செலவுக் கணக்கை நிதித்துறையிடம் தாக்கல் செய்யும்போது பிரச்னை வெடிக்க வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

தமிழிசைக்கு ‘கீ’ கொடுக்கும் சீனியர்கள்!“மலை போய் நயினாரா… விட்றாதீங்க!”

படிப்பு விஷயமாக விரைவிலேயே வெளிநாட்டுக்குப் பறக்கவிருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில் அண்ணாமலையின் பதவியைக் கைப்பற்ற, நயினார் நாகேந்திரன் டெல்லியில் காய்நகர்த்துகிறாராம். இதையறிந்த கமலாலய சீனியர்கள் சிலர், “இது முக்கியமான சமயம். நாடாளுமன்றத் தேர்தலின்போது நெல்லைத் தொகுதியை இழந்ததுபோல, தலைவர் நாற்காலியையும் நயினாருக்கு விட்டுக்கொடுத்துடாதீங்க!” என்று தமிழிசைக்கு கீ கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.

தமிழிசை செளந்தரராஜன்

கூடவே, “பிரஸ் மீட்டால் வளர்ந்த கட்சிக்கு, மைக்கைப் பார்த்தாலே பதறி ஓடும் நயினார் சரிப்பட்டு வர மாட்டார். ஏற்கெனவே தலைவராக இருந்த தமிழிசைக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்று சீனியர்கள் சிலர் இணைந்து டெல்லிக்கும் ஓலை ஒன்று அனுப்பியிருக்கிறார்களாம்!

மிஸ்டர் கழுகு: “செந்தில் பாலாஜி வரட்டும்…” – அமைச்சரவை மாற்றம்… காத்திருக்கும் அறிவாலயம்!
காரணம் நீர்வளத்துறையா?வீணாகும் தண்ணீர்… தவிக்கும் விவசாயிகள்!

அண்டை மாநிலங்களில் அளவுக்கு அதிகமான மழை கொட்டித் தீர்த்துவருவதால், தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதனால், மேட்டூர் உள்ளிட்ட அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியிருக்கின்றன. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேமிக்கப்போவதாக மாவட்ட நிர்வாகங்கள் சொன்னாலும், பெரும்பாலான நீர்நிலைகள் முறையாகத் தூர்வாரப்படவில்லை என்பதே உண்மையான நிலவரமாம். நீர்வளத்துறை மேலிடம், தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மண் எடுப்பதற்காகப் பல நீர்நிலைகளைத் தூர்வாராமல், விவசாயிகளையும் மண் எடுக்க விடாமல் தடுத்துவைத்திருந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள். “ஏற்கெனவே, காவிரி நீரை தமிழ்நாடு வீணாக்குகிறது என்று சொல்லித்தான், மேக்கேதாட்டூவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வாதாடிவருகிறது. அவர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ்நாடு நீர்வளத்துறையே செயல்படுவது வேதனையளிக்கிறது” என்று புலம்புகிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

கோயில் யானை என நினைத்து காட்டு யானைக்கு பிரசாதம் கொடுக்கச் சென்ற பக்தர்!

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In