Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

40 நாட்கள்.. பாஜக ஆளும் மணிப்பூரில் ஓயாத வன்முறை- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2023
in அரசியல் செய்திகள்
0
40 நாட்கள்.. பாஜக ஆளும் மணிப்பூரில் ஓயாத வன்முறை- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம்!
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Mathivanan Maran
Published: Sunday, June 18, 2023, 23:30 [IST]
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் 40 நாட்களுக்கும் மேலாக இன வன்முறை நீடித்து வருவதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே பெரும் வன்முறை தொடருகிறது. கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய இந்த வன்முறை 40 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மணிப்பூரின் குக்கி, மைத்தேயி இரு இனக்குழுவினருமே வாழ்விடங்களில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குக்கி அகதிகள், மிசோரம் மாநிலத்துக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதேபோல் நாகாலாந்து மாநிலத்திலும் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காடுகளில் உயிர்தப்பி பதுங்கி உள்ளனர். மைத்தேயி- குக்கி இரு குழுவினருமே ஆயுதங்களை ஏந்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இம்மோதல்களின் அடுத்த கட்டமாக மாநில, மத்திய அமைச்சர்களின் வீடுகள் மணிப்பூரில் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. மேலும் மணிப்பூரில் வன்முறைக்கு காரணமே பாஜக என குற்றம்சாட்டி உள்ளூர் பாஜக தலைவர்களின் வீடுகள், உள்ளூர் பாஜக அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலத்தில் முகாமிட்டு அமைதி முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் மத்திய அரசின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனமாக இருப்பது கடும் சர்ச்சையையும் எழுப்பி இருக்கிறது. இந்நிலையில் மணிப்பூர் வன்முறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,. ஜனநாயக நாட்டில் வெறுப்பு, வன்முறைக்கு இடமே இல்லை. வெறுப்பும் வன்முறையும்தான் இப்போதைய மணிப்பூர் வன்முறைக்கு காரணம். இந்த வன்முறை சம்பவங்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Rashtriya Swayamsevak Sangh appealed for peace in Ethinic Hit Violence Manipur.
Story first published: Sunday, June 18, 2023, 23:30 [IST]

.

Previous Post

நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் 650 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு

Next Post

போதை தடுப்பு அதிகாரி எனக் கூறி அமெரிக்கர்களிடம் இருந்து ரூ.165 கோடி மோசடி: 4 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போதை தடுப்பு அதிகாரி எனக் கூறி அமெரிக்கர்களிடம் இருந்து ரூ.165 கோடி மோசடி: 4 பேர் கைது

போதை தடுப்பு அதிகாரி எனக் கூறி அமெரிக்கர்களிடம் இருந்து ரூ.165 கோடி மோசடி: 4 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In