மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதனை நியமித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த மனோஜ் சோனியின் பதவிக்காலம் முடிய ஐந்தாண்டுகள் இருந்த நிலையில், திடீரென கடந்த வாரம் ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், யுபிஎஸ்சி தேர்வுக் குழு உறுப்பினராக இருக்கும் ப்ரீத்தி சுதனை அடுத்த தலைவராக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.