சாவர்க்கர் தனது மனைவியை படிக்க வைத்ததாக நேர்காணலில் பேசியிருந்த சுதா, ஆனால் அவர் கூறிய கதை வேறொரு சமூக சீர்திருத்தவாதியின் கதையாகும். தற்போது உண்மைக்கு புறம்பாக பேசியதால் மனிப்பு தெரிவித்துள்ளார்.
கருத்தில் இருந்து பின்வாங்கிய சுதா கொங்கரா என் தவறுக்கு வருந்துகிறேன். எனது 17வது வயதில் பெண் கல்வி குறித்து எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்காணலில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான் எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலேவுக்கு என்றும் தலை வணங்குகிறேன்.
பல எதிர்ப்புகளை கடந்து சாவர்க்கர் தனது மனைவியை படிக்க வைத்ததாக நேர்காணலில் பேசியிருந்தார் சுதா. இது ஜோதிபா – சாவித்திரிபாய் புலேவின் வாழ்க்கை கதை என பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.


❤️❤️❤️❤️