டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு, வணக்கம்! இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.
