
ஸ்மார்ட் டிவிகளுக்கான வீடியோ ஆப் ஒன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக, ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸ் ராணுவத்தின் விமானம் ஒன்று மலைப்பாங்கான இடத்தில் விபத்துக்குள்ளானதில், 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கப் பிரதமர் சிரில் ராம்ப்போசா, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்குக்கு வந்தடைந்தார்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆவணப்படக்குழு, பசிபிஃக் பெருங்கடல் பகுதியில் படம் எடுக்கச் சென்றபோது, அங்கிருந்த டைகர் சுறாக்களால் தாக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் ரிஷி சுனக் பங்கேற்றார். இந்த நடவடிக்கையில் அந்நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 105 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகரிலிருந்து, சவுதி அரேபியாவுக்கு முதல் வணிக விமானம் ஹஜ் யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, பேரரசி மசாகோ ஆகியோர் முதல் அரசுமுறை பயணமாக இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்குச் சென்றிருக்கின்றனர்.

நேபாளத்தில் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், கிழக்கு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மலைப்பகுதியில் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், அதில் பயணம் செய்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

