அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம், தனிமைப்பட்டு போவீர்கள் என்று பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் #INDIA கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
மாண்புமிகு பிரதமர் பிரதமர் அவர்களே…
“தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!
அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

கமெண்ட் செய்ய விரும்பவில்லை