விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி பகுதிகள் முழுவதும் அவல நிலையாகவே காட்சியளிக்கிறது எதையும் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் கடந்த சில வருடங்களாக பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி குடிநீர் திட்டம் என்று தொடங்கி ஊரையே நாசப்படுத்தி வருகிறார்கள் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்துமே சீர்குழைந்து மக்கள் படும் வேதனை எண்ணிலடங்காது பாதள சாக்கடை திட்ட வேலை முடிந்தும் அனைத்து பகுதிகளிலும் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலைகளில் செல்கிறது மீண்டும் மீண்டும் சாலைகளை உடைத்து சரி செய்கிறோம் என்று கூறி மக்களுக்கு தொல்லை தந்த வண்ணமாக உள்ளது தற்போது பச்சமடம் மகளிர் காவல் நிலையம் முன்புறம் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடி மகளிர் காவல் நிலையத்துக்குள் புகுந்து துர்நாற்றம் வீசுகிறது நோய்தொற்று அபாயம் உள்ளது இதை உடனடியாக சரி செய்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்

